மே மாதத்தில் வெப்ப அலை வீசும்!! -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
மே மாதத்தில் வெப்ப அலை வீசும்!! -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை-

இந்தியாவில் மே ஆரம்பத்தில் இருந்தே கடுமையான வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கையில்:- 

மத்திய மற்றும் வட இந்தியாவில் 46 டிகிரி செல்சியஸ் (115 டிகிரி பாரன்ஹீட்) அடைந்துள்ளன. இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பின் அதிகபட்ச வெயில் மார்ச் மாதம் பதிவாகியுள்ளது. 

2022 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.

வடமேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயரும். டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா , ஜார்கண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசும். 

பொதுவாக குளிர்ச்சியான மழை பெய்யும் பருவமழைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதுவரை கடுமையான கோடையே நீடிக்கும் என தெரிவித்துள்ளது.