தளபதியுடன் நடிக்கும் ஷாம்

ஆசிரியர் - Editor II
தளபதியுடன் நடிக்கும் ஷாம்

தற்போது தயாராகி வரும் தளபதி 66 படத்தில் நடிகர் ஷாம் தளபதி விஜய்யின் அண்ணனாக நடிக்கவிருப்பதாக தகவகள் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் வம்சி இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. 

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதில் தளபதி விஜய்யின் சகோதரராக 1980களில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதை மோகன் மறுத்தார். 

இந்நிலையில், தளபதி விஜய்யின் சகோதரராக ஷாம் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 2 ஆம் திகதி ஐதராபாத்தில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் ஷாம் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு