SuperTopAds

சீனப் பிரஜைகளுக்கான சுற்றுலா விசாக்கல் நிறுத்தம்!! -இந்தியா அரசு அதிரடி-

ஆசிரியர் - Editor II
சீனப் பிரஜைகளுக்கான சுற்றுலா விசாக்கல் நிறுத்தம்!! -இந்தியா அரசு அதிரடி-

சீனா நாட்டுப் பிரஜைகளுக்கு இந்தியா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களை நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குள் நுழைவது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையிலேயே மேப்படி தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

பூட்டான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியாவால் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதி உள்ள பயணிகள், இந்தியாவால் வழங்கப்பட்ட விசா அல்லது இ விசா உள்ள பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

சுற்றறிக்கையின்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள்  தங்களது உரிய ஆவண அடையாள அடடை மற்றும்  இராஜதந்திர கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் உட்பட வெளிநாட்டு குடியுரிமை அட்டையை கொண்ட பயணிகளும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

10 ஆண்டுகள் செல்லுபடியாகும் சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி சீனாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்நாட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்படாத பிரச்சனைகள் குறித்து இந்தியா கேள்வி எழுப்பி வருகிறது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பல இளைஞர்களின் எதிர்காலத்தை உள்ளடக்கிய இந்தப் பிரச்சினையில் சீனா பாரபட்சமற்ற அணுகுமுறையை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.