SuperTopAds

பக்கோ இயந்திரத்தை கொண்டு ஏ.டி.எம் கொள்ளை!!

ஆசிரியர் - Editor II
பக்கோ இயந்திரத்தை கொண்டு ஏ.டி.எம் கொள்ளை!!

இந்தியாவின் மஹராஷ்டிரா மாநிலம், சாங்க்லீ எனும் பகுதியில் மண்வெட்டும் பாரிய இயந்திரத்தை பயன்படுத்தி, வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தை திருடிச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆள்நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பமொன்றில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வங்கி ஏ.டி.எம் மையத்தின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காணொளி, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, அம்மாநில பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.