மே-18ம் திகதி இனப்படுகொலை நாளாக பிரகடனம்..
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே-18ம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது.
வடமாகாணசபையின் 122வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாகாண மகளீர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மேற்படி பிரகடனத்திற்கான பிரேரணையை சபைக்கு கொண்டுவந்தார். இதன்போது மே-18ம் திகதியை
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் வடமாகாணசபை பிரகடனப் படுத்தவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் வழிமொழிந்தார். இதனை தொடர்ந்து சபையில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.