ஐ.பி.எல் தொடரில் மோசமான சாதனை!! -மும்பை அணிக்கு கிடைத்த மகுடம்-

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் தொடரில் மோசமான சாதனை!! -மும்பை அணிக்கு கிடைத்த மகுடம்-

ஜ.பி.எல் ரி-20 தொடரின் ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டியில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை அணி பெற்றது.

ஐ.பி.எல் ரி-20 தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை தான் மோதிய 7 ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்த சீசனில் மும்பை அணி வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்த நிலையில் ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டியில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை பெற்றது. இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு டெல்லியும், 2019 ஆம் ஆண்டு பெங்களூரு அணியும் தங்களது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று இருந்தன. 

ஐ.பி.எல் ரி-20 தொடரில் ஒரு அணி தொடர்ச்சியாக 7 தோல்விகளை சந்திப்பது 11 ஆவது முறையாக நிகழ்ந்துள்ளது. ஆனால் சாம்பியன் பட்டம் பெற்ற அணி தொடர்ந்த 7 தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு