அதிகரிக்கும் கொரோனா!! -2 கோடியே 85 இலட்சம் மக்கள் வசிக்கும் நகருக்கு முழு ஊரடங்கு-

ஆசிரியர் - Editor II
அதிகரிக்கும் கொரோனா!! -2 கோடியே 85 இலட்சம் மக்கள் வசிக்கும் நகருக்கு முழு ஊரடங்கு-

சீனா நாட்டின் ஷாங்காய் நகரில், ஒரு சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 கோடியே 85 இலட்சம் மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. இதையடுத்து இம்மாதம் தொடக்கம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

வருமான இழப்பு மற்றும் உணவு தட்டுப்பாடால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், நகரின் பல்வேறு பகுதிகளில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், டெஸ்லா உள்பட ஏராளமான தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்ததால், முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 வாரங்களாக நீடித்த ஊரடங்கு முடிவுக்கு வரும் என நம்பியிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு