மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா!! -இராணுவத்தினருக்கு ஜனாதிபதி புதின் பாராட்டு-
உக்ரைன் மரியுபோல் நகரை ரஷியா படைகள் கைப்பற்றியதன் மூலம் அந் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று ரஷியா ஜனாதிபதி புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் இன்று 55 ஆவது நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மரியபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷியா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷியா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷிய ஜனாதிபதி புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷிய இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி புதின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடித்தக்கது.