ஜ.பி.எல் தொடருக்கு வந்த சிக்கல்!! -டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி-
டெல்லி அணியின் பிசியோ பர்ஹார்ட்டுக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியதைத் தொடர்ந்து தற்போது டெல்லி அணி வீரர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் ரி-20 தொடரின் 15 ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் அவுஸ்ரேலியா அணியைச் சேர்ந்த சகலதுறை வீரர் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பி.சி.சி.ஐ உத்தரவிட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் இன்று திங்கட்கிழமை அவர்களது அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் டெல்லி அணியின் பிசியோ பர்ஹார்ட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியது. இந்நிலையில் தற்போது டெல்லி அணி வீரர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.