இந்திய எல்லை அருகே 3 தொலைபேசி ரவர்கள்!! -புதிதாக சீனா நிறுவியதால் பரபரப்பு-

ஆசிரியர் - Editor II
இந்திய எல்லை அருகே 3 தொலைபேசி ரவர்கள்!! -புதிதாக சீனா நிறுவியதால் பரபரப்பு-

இந்திய எல்லைக்கு மிக அருகே 3 தொலைபேசி ரவர்களை சீனா நிறுவியுள்ளதாக லே மாவட்டத்தின் உள்ளூர் கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் பிரச்னைகள் தொடர்ந்து வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு நடைபெற்றாலும் பிரச்னைகள் தொடர்கிறது. 

இதற்கிடையே எல்லைப் பகுதியில் கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரி மீது சட்டவிரோதமாக சீனா பாலம் கட்டியது. இந்தப் பாலம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைப்பதாக உள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய எல்லைக்கு மிக அருகில் சீனா 3 மொபைல் டவர்களை ஏற்படுத்தியுள்ளதாக லே மாவட்டத்தில் உள்ள தர்புக் தாலுகாவின் சுஷூல் பகுதி கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் தெரிவித்துள்ளார். சில மாதங்களாக எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடர்ந்து வரும் சூழலில் இப்போது மொபைல் டவர்களை இந்திய எல்லைக்கு அருகே சீனா அமைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.