சீனாவில் உச்சம் தொட்ட கொரோனா!! -ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
சீனாவில் உச்சம் தொட்ட கொரோனா!! -ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு தொற்று-

சீனா நாட்டில் உள்ள ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சீன ஜனாதிபதி மீண்டும் அமல்படுத்தியுள்ளார்.

வர்த்தக நகரமான ஷாங்காயில் ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2 ஆயிரத்து 573 பேருக்கு அறிகுறிகளுடன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா பரவத் துவங்கியதில் இருந்து பதிவான அதிக பட்ச எண்ணிக்கை இதுவாகும். இந்நிலையில், தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்ததை அடுத்து, கொரோனா தளர்வுகளுக்கு தற்போது வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு