ஜெனரேட்டர் (மின்பிறப்பாக்கி) வெடித்ததில் படுகாயமடைந்த 9 வயது மகள் நேற்றிரவு மரணம், தாய் இன்று அதிகாலை மரணம்..!
கோப்பு படம்
வீட்டில் பொருத்தியிருந்த மின் பிறப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும், 9 வயதான மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் பதுளை - கெப்பட்டிபொல பகுதியில் கடந்த 29ம் திகதி இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 29ம் திகதி மின்வெட்டு நேர பயன்பாட்டிற்காக வைத்திருந்த மின் பிறப்பாக்கி மின் கசிவு காரணமாக வெடித்துள்ளது.
சம்பவத்தில் 38 வயதான பெண் ஒருவரும் அவருடைய மகளும், மகனும் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் காயமடைந்த சிறுவர்கள் கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில்,
நேற்றய தினம் 14 வயதான மகள் உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை தாயார் உயிரிழந்துள்ளார். இதேவேளை காயமடைந்த 5 வயதான மகன் கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.