இரணைமடு குளத்தின் நீர்மட்டம் சடுதியாக 35.5 அடியாக உயர்வு..! தாழ்நில பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை..
கிளிநொச்சியில் கனமழை பெய்துவரும் நிலையில் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 35.5 அடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது.
கனகாம்பிகைக்குளம் மீண்டும் வான்பாய ஆரம்பித்துள்ளது. இதேவேளை பாரதிபுரம், பொன்னகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை காரணமாக வெள்ள நீர் மக்கள் குடியிருப்புக்களிற்குள் புகுந்துள்ளது.
உள்ளுர் வீதிகளில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இடர் தொடர்பான புள்ளிவிபரங்கள்
மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவு தரவுகளை திரட்டி வருகின்றது.