10 கோடி கேட்ட நயன்தாரா!! -அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்-
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லேடி சூப்பஸ்டார் நயன்தாரா, புதிய படத்தில் நாயகியாக நடிக்க இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேடி சூப்பஸ்டார் நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கலக்கி வருகின்றார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் இதுவரை நெருங்க முடியவில்லை.
நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன. இதனால், நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிகபட்சம் 3 கோடி ரூபா என்று இருந்தது. பின் அது 5 கோடி ரூபாவாக உயர்ந்தது.
இந்நிலையில், தற்போது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்திவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்குத்தான் அவர் 10 கோடி ரூபா கேட்டதாக கூறப்படுகிறது.