தமிழர் விடுதலை கூட்டணியின் உள்வீட்டு பிரச்சினை முடிந்துவிட்டதா? இல்லை இப்போதுதான் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
தமிழர் விடுதலை கூட்டணியின் உள்வீட்டு பிரச்சினை முடிந்துவிட்டதா? இல்லை இப்போதுதான் ஆரம்பம்..

தமிழ் விடுதலை கூட்டணியின் உள்வீட்டு பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கின்றது. ஆனால் ஆனந்தசங்கரி உள்வீட்ட பிரச்சினை முடிந்துவிட்டதாக கூறுகிறார். இப்போதும் நானே தலைவர் என தம்பையா ராஜலிங்கம் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் 

என தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்ற ஆனந்தசங்கரி மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்டி இருந்தார். நான் தான் அந்த கட்சியினுடைய தலைவர். அதில் எந்த மாற்றமும் இல்லை. 

ஒரு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தால் முதலிலேயே தலைவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். என்னுடன் கலந்தாலோசிக்காமல் கூட்டத்தை நடத்தினால் யாப்புக்கு முரணானது. இப்போது உள் வீட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது 

என ஆனந்தசங்கரி கூறுகின்றார். ஆனால் கட்சியின் பிரச்சனை தற்போதே ஆரம்பித்துள்ளது. தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் மத்தியகுழு உறுப்பினர் அல்ல. அவர் பொதுச் சபை உறுப்பினர். 

மத்திய செயற்குழுவில் இல்லாத ஒருவர் அழைக்கப்பட்டு தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். நேற்றைய கூட்டம் தேர்தல் திணைக்களத்தால் ரத்து செய்ய செய்யப்படும் என்பதில் திடகாத்திரமான நம்பிக்கை கொண்டுள்ளோம். 

இது சம்பந்தமாக உடனடியாக நாங்கள் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அன்றும் இன்றும் தலைவர் நானே என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு