உக்ரைன் போரில் அதிக வீரர்களை இழந்து விட்டோம்!! -முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஷியா-
உக்ரைன் போரில் ரஷியா இராணுவத்தினரின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது தமக்கு மிகுந்த கவலையை கொடுப்பதாக அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் கிரெம்ளின் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷியா 43 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷமாக போராடி வருவதால் ரஷியா திணறி வருகிறது. ரஷியா படைகள் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி வருகின்றது.
இந்த போரால் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ரஷியா மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் போது ரஷிய இராணுவத்தினர் பலரை கொன்று குவித்ததாக உக்ரைன் தெரிவித்தது. ஆனால் அதனை ரஷியா மறுத்தது.
இந்தநிலையில் முதன்முறையாக உக்ரைனுடனான போரில் அதிக இராணுவத்தினரை இழந்து விட்டோம் என ரஷியா ஒப்புதல் அளித்து உள்ளது. இவ்விடயம் தொடர்பில் அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் கிரெம்ளின் கூறும்போது, உக்ரைன் போரில் ரஷியா படைவீரர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது எங்களுக்கு பெரிய கவலையை அளிக்கிறது எனவும் தெரிவித்து உள்ளார்.