முத்தம் கொடுக்க, கட்டிப்பிடிக்க தடை!! -சீனா அரசு கடும் கெடுபிடி-
சீனாவில் மீண்டும் மிக கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அந்நாட்டு அரசினால் மக்கள் கடுமையான சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முத்தம் தரக்கூடாது, கட்டிப் பிடிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டிரோன்கள் மூலமாக கொரோனா குறித்த எச்சரிக்கைகளை சீனாவின் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கடுமையான ஊரடங்குகளும் அமலில் உள்ளன.
ஆண்களை விட்டு விலகி இருக்கும்படி சுகாதாரத்துறை ஊழியர்கள் பெண்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.