தமிழகத்திற்கு தண்ணீா் தர முடியாது; கர்நாடக அறிவிப்பு

ஆசிரியர் - Admin
தமிழகத்திற்கு தண்ணீா் தர முடியாது; கர்நாடக அறிவிப்பு

கா்நாடக அணைக்கட்டு பகுதிகளில் போதிய மழைப் பொழிவு இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு எங்களால் தண்ணீா் திறக்க இயலாது என்று கா்நாடகா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிாி மேலாண்மை வாாியம் தொடா்பான வரைவு அறிக்கையை தாக்கல் செய்வது தொடா்பாக கடந்த 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. நீா் தண்ணீா் திறக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். ஆனால், எங்களிடம் போதிய நீா் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு நீா் திறக்க இயலாது என்று கா்நாடகா மூத்த வழக்கறிஞா்கள் தொிவித்தனா்.

பின்னா் 2 டி.எம்.சி. நீரையாவது திறந்து விட முடியுமா என்று கா்நாடகா வழக்கறிஞா்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இந்நிலையில் கா்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அறிக்கையில், தற்போது கா்நாடகா அணைக்கட்டு பகுதிகளில் போதி மழைப் பொழிவு இல்லை. இதனால் அணைகளில் நீா் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

எனவே தமிழகத்திற்கு தண்ணீா் திறந்து விட முடியாது என்று குறிப்பிட்டுள்ளனா். மேலும் பெங்களூரு நகரத்திற்கான குடிநீா் தேவை அதிகமாக உள்ளது. தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரின் அளவில் ஒரு பங்கை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது என்று கா்நாடகா அரசு தொிவித்துள்ளது.

இந்நிலையில் காவிாி மேலாண்மை வாாியம் தயாாிப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யக் கோாிய வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.