SuperTopAds

இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதானவர் துக்கிட்டு தற்கொலை!! -5 மாதங்களில் நடந்த துயர சம்பவம்-

ஆசிரியர் - Editor II
இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதானவர் துக்கிட்டு தற்கொலை!! -5 மாதங்களில் நடந்த துயர சம்பவம்-

இந்தியாவில் இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான ஒருவர் திருமணமான 5 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்திலுள்ள சவுடனகுப்பே கிராமத்தில் வசிக்கும் 45 வயதான சங்கரண்ணா கடந்த வருடம் அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்ட மேகனா (வயது 25) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின் இருவரும் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் சங்கரண்ணா தற்போது தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

திருமணம் முடிந்த பின் சங்கரண்ணாவும், மேகனாவும் சந்தோஷமாக வாழ்ந்து உள்ளனர். மேகனா தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக மேகனாவுக்கும், சங்கரண்ணாவின் தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் மேகனா, சங்கரண்ணாவிடம் தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று கூறி உள்ளார்.

ஆனால் தாயை பிரிந்து வர மாட்டேன் என்று சங்கரண்ணா கூறியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுபோல் கடந்த திங்கட்கிழமையும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சங்கரண்ணா நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறி அக்கிமிதிபாளையா என்ற கிராமத்தில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது மகனின் மரணத்திற்கு மேகனா தான் காரணம் என்றும், அவரின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் கணவரின் மரணத்திற்க தாயே காரணம் என்று மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.