ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய வசூல் சாதனை!!

ஆசிரியர் - Editor II
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய வசூல் சாதனை!!

பாகுபலி புகழ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் அசத்தல் நடித்து வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. 

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட் பலர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25 ஆம் திகதி வெளியிடப்பட்டது. 

உலகம் முழுவதும் இத்திரைப்படம் கடந்த 3 நாட்களில் 500 கோடி ரூபா வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது. இதுபற்றி திரைப்பட விமர்சகர் ஒருவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் புதிய சாதனையை படைத்து இருக்கிறது. 500 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. (தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது).

இந்திய திரைப்பட புகழை எஸ்.எஸ். ராஜமவுலி மீண்டும் கொண்டு வந்துள்ளார் என தெரிவித்து உள்ளார். அதனுடன், குறிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில், விடுமுறை அல்லாத நாளில் மற்றும் கொரோனா காலத்தில் திரைப்படம் வெளியாகி உள்ளது என தெரிவித்து உள்ளார். இதுதவிர, கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளியிடப்பட்டு, இந்திய அளவில் ஞாயிற்று கிழமை அதிக வசூல் ஈட்டிய டாப் 5 இந்தி திரைப்பட பட்டியலையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

அதில், 31.50 கோடி ரூபா வசூலுடன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. 2 ஆவது இடத்தில் சூர்யவன்ஷி (26.94 கோடி ரூபா), 3 ஆவது இடத்தில் 83 (17.41 கோடி), 4வது இடத்தில் கங்குபாய் கத்தியவாடி (ரூ.15.30 கோடி) மற்றும் 5வது இடத்தில் தி காஷ்மீர் பைல்ஸ் (15.10 கோடி ரூபா) ஆகியவை உள்ளன.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு