SuperTopAds

உக்ரைன் அணுசக்தி ஆய்வு மையத்தின் மீது ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதல்!

ஆசிரியர் - Editor II
உக்ரைன் அணுசக்தி ஆய்வு மையத்தின் மீது ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதல்!

உக்ரைனின் நாட்டின் கார்கிவ் நகரில் உள்ள அணுசக்தி ஆய்வு மையத்தின் மீது ரஷ்ய இராணுவம் நேற்று ஞாயிற்றுகிழமை மீளவும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வைத்தியசாலைகக், அரச அலுவலகங்கள் ஆகியவற்றை ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும் இங்குள்ள அணுசக்தி ஆய்வு மையத்தின்மீது ஏற்கனவே குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், அங்குள்ள கட்டடங்கள் சேதமடைந்தன. எனினும் அதில் இருந்து கதிர்வீச்சு எதுவும் அப்போது வெளிவரவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த அணுசக்தி ஆய்வு மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.இதை உக்ரைன் நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் நேற்று உறுதிபடுத்தி உள்ளது. அங்கு தொடர்ந்து குண்டுமழை பொழிவதால், அந்த மையத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.