"பீஸ்ட்" படத்தின் பெயர் மாற்றம்!! -படக்குழுவின் தடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் பெயரை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்தது. 

இதற்கான போஸ்டர் அண்மையில் வெளியானது. அந்த போஸ்டரில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 3 மொழிகளிலும் இந்த படத்தின் பெயர் பீஸ்ட் என்றே அந்தந்த மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் இந்தி பெயர் மட்டும் மாற்றப்பட்டு இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பீஸ்ட் படத்தை இந்தியில் ‘ரா’ என்ற பெயரில் வெளியிட உள்ளனர். 

இந்தியாவின் ரா உளவு அமைப்பை குறிக்கும் வகையில் தான் இப்படி பெயர் சூட்டப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த பெயர் மூலம் தளபதி விஜய் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு