அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!! -பெருத்தமான நடிகரை தேடும் படக்குழு-
இந்தியாவின் ஜனாதிபதியாக 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை இருந்த அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் விஞ்ஞானியாக இருந்தபோது இஸ்ரோ மிகச் சிறப்பாக செயல்பட்டது. இளைய தலைமுறையினருக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அப்துல் கலாம் 2007 இல் மறைந்தார். இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படம் ஆகப்போகிறது. பிரபல மலையாள இயக்குனர் ஸ்ரீ குமார் என்பவர் இயக்கயிருக்கும் இந்தப் படத்திற்கு விஞ்ஞானியன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்த படத்தில் அப்துல் கலாம் ஆக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.