ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!! -சீனாவை கடுமையாக எச்சரித்த பைடன்-
உக்ரேன் மீது நடத்தப்படும் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டம் நடத்த பின் ஊடங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும். ரஷ்யாவுக்கு சீனா உதவி வழங்கும் சாத்தியம் குறித்து, கடந்த வாரம் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்குடன் மிகவும் நேரடியான உரையாடல் நடத்தினேன்.
ரஷ்யாவுடன் இருப்பதை விட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.
அதனால் அவர் ரஷ்யாவுடன் பரஸ்பரம் செய்து கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன். வெள்ளிக்கிழமை போலந்துக்கு செல்லும் போது உக்ரேனிய அகதியைப் பார்வையிடுவேன் என்று நம்புகிறேன்.
நான் அந்த மக்களைப் பார்க்கத் திட்டமிட்டுள்ளேன், அதே போல், என்னால் பார்க்க முடியும் என்று நம்புகிறேன், நான் எங்கே போகிறேன் என்று நான் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன் என்றார்.