6 டொன் பாறையை குடைந்து எஸ்.பி.பி.யின் உருவம் வடிவமைப்பு!!
இந்தியாவின் காஞ்சிபுரம் - தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அமைத்து வருகிறார்.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு 74 வயதில் காலமானார். அவரது உடல் காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அமைத்து வருகிறார்.
ஓராண்டாக நடக்கும் இப்பணி நிறைவடைய உள்ளது. இங்கு அமையும் சிலைகள் புதுவையை அடுத்த ஆரோவில் சஞ்சீவி நகர் பகுதியில் சிற்பக்கூடத்தில் உருவாகியுள்ளன.