உக்ரைனுக்கு மேலும் 6,000 எறிகணைகள்!! -வழங்கியது பிரித்தானியா-
பிரித்தானியா அரசாங்கம் ரஷ்யாவை எதிர்த்துப் யுத்தம் செய்யும் உக்ரைன் இராணுவத்திற்கு மேலும் 6,000 எறிகணைகளை வழங்கவுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பான அறிவிப்பை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், உக்ரைனிய இராணுவத்தினர் மற்றும் விமானிகளுக்கான வேதனத்தை வழங்குவதற்கு 33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் பிரித்தானியாவினால் வழங்கப்படவுள்ளது.
உக்ரைனுக்கு, இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவை அதிகரிப்பதற்கு பிரித்தானியா தொடர்ந்தும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் தெரிவித்துள்ளார்.
அங்கு சுதந்திரத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்புள்ளது. அவ்வாறில்லை எனில், ஐரோப்பா மற்றும் உலக நாடுகளின் சுதந்திரம் பறிக்கப்படும் நிலை உள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான போருக்காக யுக்ரைன் படைகளுக்கு ஏற்கனவே பிரித்தானியா 4,000 எறிகணைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.