3-டி வடிவத்தில் வெளியாகவுள்ள ஆர்.ஆர்.ஆர்

ஆசிரியர் - Editor II
3-டி வடிவத்தில் வெளியாகவுள்ள ஆர்.ஆர்.ஆர்

பாகுபலி புகழ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் புதுவிதமாக வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கிவுள்ளார். 

டி.வி.வி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது.  

நீண்ட இடைவேளைக்கு பின் இப்படம் வருகிற மார்ச் 25 ஆம் திகதி  திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்ஷன் மற்றும் டிராமாவாக உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தை புது விதமாக 3-டி வடிவத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையாக 3-டியில் ஆக்ஷன் மற்றும் டிராமாவாக வெளியாகவுள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு