ஜெர்சி எண் 7 இன் ரகசியம்!! -போட்டுடைத்த டோனி-

ஆசிரியர் - Editor II
ஜெர்சி எண் 7 இன் ரகசியம்!! -போட்டுடைத்த டோனி-

மகேந்திரசிங் டோனி தனது அணி சீருடைய இலக்கம் (ஜெர்சி) 7 அணிந்து விளையாடுவது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் சமூகவலைத்தளம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த டோனி தான் ஏன் 7 ஆவது எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடுகிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்:- 7 என்பது எனக்கு அதிர்ஷ்டமான எண் என்று ஆரம்பத்தில் பலர் நினைத்தார்கள். ஆனால் நான் மிகவும் எளிமையான காரணத்திற்காக தான் அந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஜூலை 7 ஆம் திகதி பிறந்தேன். எனவே, 7 ஈவது மாதம் 7 ஈவது நாள், அதுதான் காரணம். 

எந்த எண் நல்ல எண் என்று பார்ப்பதற்குப் பதிலாக, எனது பிறந்த தேதியை எண்ணாகப் பயன்படுத்த நினைத்தேன். அதே நேரத்தில் பலர் எண் 7யை அதிஷ்ட எண்ணாக கருதுவதில்லை. நான் எண்களை பற்றி மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல. ஆனால் எண் 7 என் இதயத்திற்கு நெருக்கமான  எண் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு