தான் படித்த பாடசாலைக்குச் சென்ற பேரறிவாளன்!!
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேறிவாளன் பிணையில் வந்த நிலையில் ஜோலார்பேட்டையில் தான் படித்த பாடாசலைக்குச் சென்று வகுப்பறையை பார்த்து ஆனந்தப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கியது. இதையடுத்து உத்தரவு நகலை சென்னை புழல் சிறையில் முறைப்படி சமர்பித்து வெளியே வந்தார்.
பின் காரில் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு வந்தார். நேற்று காலை ஜோலார்பேட்டையில் உள்ள தாத்தா, பாட்டி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஜோலார்பேட்டையில் தான் படித்த அரச பாடசாலைக்குச் சென்று வகுப்பறையை பார்த்து ஆனந்தப்பட்டார்.
பேறிவாளனுக்கு திருமணம் செய்ய அவரது தாய் அற்புதம்மாள் ஏற்பாடுகள் செய்து வருகிறார். மேலும் அவருக்கு நிரந்திரமாக விடுதலை கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.