SuperTopAds

மகளை வன்புணர்ந்த தந்தை!! -10 வருட சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

ஆசிரியர் - Editor II
மகளை வன்புணர்ந்த தந்தை!! -10 வருட சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

தான் பெற்ற மகளையே வன்புணர்ந்த தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 1.5 இலட்சம் அபராதம் விதித்து ஆலப்புழா சிறப்பு போஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் சேர்தலா பகுதியைச் சேர்ந்த நபர் தனது 6 ஆம் வகுப்பு பயிலும் மகளை 2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமியின் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை உணர முடியவில்லை.

இந்நிலையில் சிறுமியின் நடத்தையில் வித்தியாசம் இருந்ததை கண்டுபிடித்த உறவினர் ஒருவர் பொலிஸாரிடம் முறையிட்டனர். 

இந்தப் புகாரையடுத்து சிறுமியிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்தது உறுதியானது. இதனையடுத்து தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஆலப்புழா சிறப்பு போஸ்கோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.இஜாஸ், சிறுமியின் தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 1.5 இலட்சம் ரூபா அபராதமும் விதித்தார். இதில் ஒரு இலட்சம் சிறுமியின் நலனுக்காக கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.