சீனா - அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் ஸ்டெல்த் வைரஸ்!! -ஒமைக்ரானைவிட மிக மிக வேகமாக பரவக்கூடியது-
உயிர் கொல்லி கொரோனா வைரஸ், ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் போன்ற பல்வேறு வகைகளில் உருமாறி பாதிப்பை ஏற்படுத்தியது.
தற்போது ஒமைக்ரான் வைரஸ் ‘ஸ்டெல்த் ஒமைக்ரான்’ ஆக உருமாறி உள்ளது. உருமாறிய ஸ்டெல்த் ஒமைக்ரான் வைரஸ் சீனாவில் வேகமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு தினமும் 5,000 ற்கும் மேற்பட்டவர்கள் ஸ்டெல்த் ஒமைக்ரானால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் அமெரிக்காவிலும் ஸ்டெல்த் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட பல நகரங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ஒமைக்ரான் தொற்று கட்டுக்குள் வருகின்ற நிலையில் தற்போது ஸ்டெல்த் ஒமைக்ரான் சீனாவையும், அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த ஸ்டெல்த் வைரஸ், ஒமைக்ரானை விட ஒன்றரை மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது.
இதன் உருமாற்றத்தை சோதனைகளில் கண்டறிவது மிக மிக கடினம். ஸ்டெல்த் என்ற வார்த்தைக்கும் ‘கண்டறிவது கடினம்’ என்பது தான் அர்த்தம். ஸ்டெல்த் என்பது ஒமைக்ரான் தோன்றும் போதே உருவானதுதான். எனவே இதை சிஸ்டர் வேரியன்ட் என்று அழைக்கிறார்கள்.