SuperTopAds

எந்த அணியிலும் இடமில்லை!! -வர்ணனையாளராக களம் இறங்கும் ரெய்னா-

ஆசிரியர் - Editor II
எந்த அணியிலும் இடமில்லை!! -வர்ணனையாளராக களம் இறங்கும் ரெய்னா-

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக எந்த ஒரு அணியும் ஏலம் எடுக்காமல் விடப்பட்ட சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சில வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறினர். அதற்கு மாற்று வீரராகக்கூட ரெய்னாவை தேர்வு செய்யவில்லை.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. இவர் சிறந்த வர்ணனையாளரும் கூட. 2017 ஆம் ஆண்டுக்குப்பின் வர்ணனை செய்யாமல் உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி பின்னர், சில அணிகள் அவரை பயிற்சியாளராக நியமிக்க விரும்பியது. ஆனால், ரவி சாஸ்திரி பிடி கொடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் ரெய்னா மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் ஐ.பி.எல் ரி-20 தொடரில் வர்ணனை செயல்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இந்தியில் வர்ணனை செய்ய இருக்கிறார்கள்.