SuperTopAds

எனக்கும் பாலியல் தொல்லை!! -லட்சுமி மஞ்சு பரபரப்பு தகவல்-

ஆசிரியர் - Editor II
எனக்கும் பாலியல் தொல்லை!! -லட்சுமி மஞ்சு பரபரப்பு தகவல்-

சினி துறையில் செல்வாக்கு மிக்க புன்புலத்தில் இருந்து வந்த நடிகைகளும் தமக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் செல்வாக்கு மிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சுவும் தனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

நானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டுள்ளேன். சக்தி வாய்ந்த ஒருவரின் மகள் என்பதால், எனக்கு எதவும் அப்படி நடக்காது என்றுதான் ஆரம்பத்தில் நம்பி இருந்தேன். ஆனால் இரக்க மற்றவர்களை நானும் சந்திக்க வேண்டியது இருந்தது என்றார்.