பெங்களூரு அணிக்கு புதிய தலைவர் யார் தெரியுமா?

ஆசிரியர் - Editor II
பெங்களூரு அணிக்கு புதிய தலைவர் யார் தெரியுமா?

15 ஆவது ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் ஆம் திகதி ஆரம்பமாகி மே 29 ஆம் திகதி முடிவடைகிறது.

இந்நிலையில் பெங்களூரு அணி இன்னும் புதிய அணித்தலைவர் யார் என்று அறிவிக்கவில்லை. விராட் கோலி தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், யார் அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் .

புதிய அணித்தலைவரை மார்ச் 12 ஆம் திகதி அறிவிக்கிறது பெங்களூரு அணி நிர்வாகம். விராட் கோலிக்கு பின் பெங்களூரு அணியின் தலைவராக யார் செயல்படுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறர்கள் .

இந்நிலையில் பெங்களூரு அணிக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த (முன்னாள் சென்னை அணி வீரர்) டு பிளெஸ்சிஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு அணி டு பிளெஸ்சிசை 7 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு