SuperTopAds

வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை!! -கணவன்-மனைவி கைது-

ஆசிரியர் - Editor II
வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை!! -கணவன்-மனைவி கைது-

இந்தியாவின் கேரளா பகுதியில் போதைப்பொருளை வாட்ஸ் அப் மூலம் விற்பனை செய்துவந்த கணவன் - மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் தம்பதி போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகவும், பெங்களூருவில் இருந்து கன்னூருக்கு சொகுசு பஸ்சில் கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் மூலம் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது. 

இதையடுத்து பொலிசார் சம்மந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கொரியர் நிறுவனத்திற்கு பார்சலில் வந்த போதைப்பொருளை வாங்க வந்த தம்பதியை மடக்கிப்பிடித்தனர். 

மேலும், தம்பதியிடமிருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ போதைப்பொருளை பொலிஸாரால் பறிமுதல் செய்தனர். கேரளாவில் ஒரே சமயத்தில் பிடிபட்ட அதிகபட்ட மதிப்புடைய போதைப்பொருள் இதுவாகும்.

தொடர்ந்து தம்பதியிடம் நடத்திய விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்துவந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.