SuperTopAds

உக்ரைன் போருக்கு எதிர்ப்பு!! -ரஷிய உணவுகள் சமைப்பதை நிறுத்திய கேரள உணவு விடுதி-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் போருக்கு எதிர்ப்பு!! -ரஷிய உணவுகள் சமைப்பதை நிறுத்திய கேரள உணவு விடுதி-

இந்தியாவின் கேரளாவில் உள்ள பிரபல உணவகம் ஒன்று உக்ரைன் மீது நடத்தப்படும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷிய நாட்டின் சாலட்டை தனது உணவகத்தில் தயாரிப்பதை நிறுத்தியுள்ளது. 

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷியா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் கேரளாவின் கொச்சி நகரில் காஷி ஆர்ட் என்ற பெயரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், உள்ளூர் உணவுகளுடன், சாலட் போன்ற வெளிநாட்டு உணவுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் ரஷியாவில் பிரசித்தி பெற்ற சாலட் ஒன்றும் இந்த விடுதியில் விற்கப்பட்டு வந்தது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து உள்ள சூழலில், போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த உணவு விடுதி ரஷிய சாலட்டை தயாரிப்பதில்லை என்று முடிவு செய்து மெனுவில் இருந்து நீக்கி உள்ளது. அதுபற்றிய தகவலை பலகை ஒன்றில் எழுதி, அதனை விடுதியின் வாசலில் வைத்து உள்ளனர்.