வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

இலங்கையின் வடகிழக்கு கரையோரங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. 

இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் 

நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. 

இது திருகோணமலை கடற்பரப்பில் இருந்து தென் கிழக்கில் 470 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதோடு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் 

ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு