SuperTopAds

ரஷ்யா செல்வந்தரின் 600 மில்லியன் டொலர் பெறுமதியான கப்பல் பறிமுதல்!! -ஜேர்மன் அதிகாரிகள் அதிரடி-

ஆசிரியர் - Editor II
ரஷ்யா செல்வந்தரின் 600 மில்லியன் டொலர் பெறுமதியான கப்பல் பறிமுதல்!! -ஜேர்மன் அதிகாரிகள் அதிரடி-

ரஷ்யாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான அலிஷர் உஸ்மானோவ்வுக்கு சொந்தமான 600 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கப்பல் ஒன்றை ஜேர்மன் அதிகாரிகள் அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.

தில்பார் என்று பெயரிடப்பட்ட 156 மீற்றர் நீளமான கப்பல் ஒலே இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

உலோக தொழிலதிபரான உஸ்மானோவ், ரஷ்ய அரசாங்கத்துடனான உறவுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட 25 முக்கிய ரஷ்யர்களுள் ஒருவராவார்.

ரஷ்யாவிற்குச் சொந்தமான பிற படகுகள், மாலைத்தீவுக்கு செல்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.