வடக்கு மீனவர்களுக்கு இந்தியாவின் உதவி மிக விரைவில் வழங்கப்படும்! கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..

ஆசிரியர் - Editor I
வடக்கு மீனவர்களுக்கு இந்தியாவின் உதவி மிக விரைவில் வழங்கப்படும்! கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..

வடக்கு மீனவர்கள் பிரச்சினை இதய சுத்தியுடன் அணுகிவரும் நிலையில் இந்திய அரசின் உதவி திட்டங்கள் விரைவில் கிடைக்கும். என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிடம் உதவி செய்யுமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம்.

இந்நிலையில் இம்மாதம் இந்திய தூதுவர் இலங்கைவரவுள்ள நிலையில் மீனவர்களுக்கான உதவித் திட்டங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகிறது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டம் 

அவர்களின் பிரச்சனயை வெளி உலகுக்கு காட்டியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய ரோலர்களை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். மீனவர்களின் பிரச்சினை தீர பிரச்சினையாக மாற்றுவதற்கு 

சில தமிழ் தரப்புகள் முன்னின்று செயற்பட்டதுடன் எனக்கு எதிராகச் செயற்படுவதற்கும் தூண்டப்பட்டார்கள். அண்மையில் பருத்தித்துறையில் இடம்பெற்ற இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இடம்பெற்ற போராட்டப்பந்தலுக்கு 

நான் சென்றபோது போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டுமானால் இந்தியர்கள் அத்துமீறி வரமாட்டார்கள் என எழுதித் தருமாறு கேட்டனர். நான் அவ்வாறு தரமுடியாது என்னை நம்பினால் போராட்டத்தை கைவிடுங்கள் என கோரியிருந்தேன். 

அவர்கள் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நான் கையெழுத்திட்டு இருந்தால் இலங்கை ஜனாதிபதியை கோட்டபாய ராஜபக்ச கையெழுத்திட வேண்டும் எனக் கூறி இருப்பார்கள் பின்னர் இந்தியப் பிரதமர் கையெழுத்திட வேண்டும் எனக் கோரியிருப்பார்கள்.

இவர்களைத் தூண்டி விட்டவர்கள் நோக்கம் மீனவர் பிரச்சினையை தீவிர பிரச்சினையாக வைத்து தமது சாக்கடை அரசியலை ஓட்டுவதே. ஆனால் என்னால் அவர்களின் அரசியலை செய்யவும் முடியாது அவ்வாறான அரசியலை முன்னெடுப்பவன் நான் அல்ல. 

அது மக்களுக்கும் தெரியும். நான் மீனவர்களின் பிரச்சினையை தீராத பிரச்சினையாக வைத்திருக்க விரும்பவில்லை ஆதலால்தான் இந்தியாவைப் பகைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கடந்த நல்லாட்சியிலும் மீனவர்களின் பிரச்சினை காணப்பட்டது. 

ஆனால் அந்த ஆட்சியின் பங்காளிகளாகச் செயற்பட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை. கடற்தொழில் அமைச்சராக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் அமைச்சர் என்ற வகையில் 

வடக்கு மீனவர்களின் பிரச்சினையை நேரில் சென்று பேசி வருகிறேன். ஆனால் என்னை பதவி விலகுமாறு சிலர் கோஷமிட்டனர். பதவி விலகுவதால் பிரச்சனை தீரப்போவதில்லை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் அமைச்சராக வருவாராயின் 

வடபகுதிக்கு அடிக்கடி வருவாரோ தெரியாது. மீனவர்களின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நினைப்புடன் இராஜதந்திர ரீதியில் பிரச்சனைகளை அணுகிவருகிறேன். 

ஆகவே கடந்த காலங்களில் தமிழ் மக்களை உசுப்பேற்று அரசியல் மூலம் பலிக் கடாக்களாக்கிய நிலையில் மீனவர் பிரச்சினையிலும் அவ்வாறு செய்ய வேண்டாம் என அவர் மேலும் கூறினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு