உக்ரைன் எல்லையில் அணு ஆயுதங்களை குவிப்பு!! -தாக்குதல் உத்தரவுக்காக காத்திருக்கும் ரஷியா படை-
உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதற்கு ரஷியா படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது எல்லையில் அணு ஆயுதங்களையும் ரஷியா குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவிடம் 5977 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் 1588 அணு ஆயுதங்களை அவர்கள் உக்ரைன் எல்லையில் குவித்துள்ளனர். அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் தரை வழி தாக்குதலுக்கு தயாராக 812 ஏவுகணைகள் உள்ளன.
இந்த ஏவுகணைகளை செலுத்தினால் அவை ரஷியாவில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் லண்டன் நகரை அடைந்துவிடும்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும், குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் தயார் நிலையில் உள்ளது. இதில் 500 கிலோ டொன் முதல் 50 கிலோ டொன் வரையிலான வெடிபொருள்கள் நிரப்பி தாக்குதல் நடத்தலாம்.
கடல் வழி தாக்குதல் நடத்த போர் கப்பல்களும், அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நீர் மூழ்கி கப்பல்களும் தயார் நிலையில் உள்ளது. போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க ரஷிய ஜனாதிபதியின் அனுமதி வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.