உக்ரைனில் முக்கிய நகரான கெர்சனை முழுமையாக கைப்பற்றியது ரஷியா!!
கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாக விழங்கும் கெர்சன் ரஷியா படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷிய இன்று புதன்கிழமை உக்கிரமான தாக்குதலை 7 வேது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இன்று புதன்கிழமை காலை ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்து பயங்கர தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகும். சுமார் 3 இலட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நகரில் 20 சதவீத ரஷிய நாட்டினர் வசித்து வருகின்றனர்.