உக்ரைன் வீரரை அழவைத்த ஆதரவுக் குரல்!! - கால்பந்து மைதானத்தில் நெகிழ்ச்சி சம்பவம்-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் வீரரை அழவைத்த ஆதரவுக் குரல்!! - கால்பந்து மைதானத்தில் நெகிழ்ச்சி சம்பவம்-

உக்ரை மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. போரை நிறுத்துமாறு ரஷ்யாவின் உட்பட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், போலந்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியின் நடந்த சம்பவம் ஒன்று, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதில் போலந்தின் பென்பிகா அணிக்காக விளையாடுகிறார் உக்ரைன் வீரர் ரோமன் யரேம்சுக். நேற்று ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் பென்பிகா அணி விளையாடிக் கொண்டிருந்தது. 

அப்போது ஆட்டத்தின் 62 ஆவது நிமிடத்தில் உக்ரைன் வீரர் ரோமன் யரேம்சுக் சப்ஸ்டிட்யூட்டாக அழைக்கப்பட்டார். மாற்று ஏற்பாடாக அழைக்கப்பட்ட ரோமனின் கையில் கேப்டன் ஆர்ம் பேண்டை டிபண்டர் ஜேன் வெர்டோகென் கட்டினார்.

இதை சற்றும் எதிர்பாராத யரேம்சுக் கண் கலங்கினார். அப்போது அரங்கம் முழுவதும் நிறைந்த மக்கள் உக்ரைன் கொடியை உயர்த்திக் காட்டியும், நாங்கள் உக்ரைனை ஆதரிக்கிறோம், போர் வேண்டாம் போன்ற பதாகைகளையும் உயர்த்திக் காட்டினர். மேலும், அரங்கிலிருந்த அனைவருமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வீரரை உற்சாகப்படுத்தினர்.

அந்த ஆதரவைப் பார்த்த ரோமன் யரேம்சுக் கண்கலங்கினார். ஒற்றுமையாக ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கு முதலில் அவரது கண்கள் கலங்கின, பின்னர் உணர்ச்சிப் பெருக்கில் அவரது உதடுகள் துடித்தன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் தங்களது ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு