உக்ரைனுக்கு ஆயுத உதவி!! -ஐரோப்பிய நாடுகளும் களத்தில்-
உக்ரைன் மீதான ரஷ்ய படைகளில் தாக்குதல் மேலும் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
குறிப்பாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், 30 ஆயிரம் தோட்டாக்களை நெதர்லாந்து, அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தீவிர மோதலில் இருக்கும் நாடுகளுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்ற கோட்பாட்டை மீறி உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக ஸ்வீடனும் அறிவித்துள்ளது.
இவ்விரு நாடுகளைப் போலவே, உக்ரைனுக்கு 2 ஆயிரத்து 700 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் நன்கொடையாக வழங்கப்படும் என டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார்.