பக்தி யாத்திரை சென்ற 192 பேர் கைது..! மோப்ப நாய்களுடன் பொலிஸார் சிறப்பு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
பக்தி யாத்திரை சென்ற 192 பேர் கைது..! மோப்ப நாய்களுடன் பொலிஸார் சிறப்பு நடவடிக்கை..

கடந்த 2 மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

சிவனொளி பாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட அட்டன் – கொழும்பு மற்றும் பலாங்கொடை, பொகவந்தலாவ, 

நோர்வூட், மஸ்கெலியா, கினிகத்தேனை தியகல, நோர்ட்டன்பிரிட்ஜ் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 இந்த சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்சா, போதை மாத்திரைகள், 

தடைசெய்யப்பட்ட சிகரட்டுக்கள், மதன மோதக்க போதைப்பொருள், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்க்ப்பட்டுள்ளன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது ஸ்டூட் என்ற பொலிஸ் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாயின் உதவியுடன் 

சுமார் 87 போதைப் பொருட்கள் வைத்திருந்த நபர்களை அட்டன் பொலிஸார் மாத்திரம் கைது செய்துள்ளதாகவும், கடந்த காலங்களில் அட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து 

கோரா என்ற நாயின் குறைப்பாட்டினை தற்போது உள்ள ஸ்டூட் மோப்ப நாய் நிவர்த்தி செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு தினங்களாக அட்டன் கோட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில், விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரேமலால் 

மற்றும் ஹட்டன் பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் அவர்களுடைய ஆலோசனைக்கமைய பொலிஸ் பரிசோதகர் தசநாயக்க தலைமையில் 

முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிவனொளிபாதமலை யாத்திரை செல்வதற்காக கேரளா கஞ்சாவுடன் சென்ற 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 

இவர்கள் ஹட்டன் நீதவான் முன்னலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் 

இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு