தொல்பொருட்கள் என நம்பப்படும் இரு கருங்கல் துாண்களை கொள்ளையடித்து சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் உட்பட 10 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
தொல்பொருட்கள் என நம்பப்படும் இரு கருங்கல் துாண்களை கொள்ளையடித்து சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் உட்பட 10 பேர் கைது..!

தொல்பொருள் சின்னங்கள் என நம்பப்படும் கருங்கல் துாண்களை கடத்திச் சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து 21ம் திகதி இரவு தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய இரண்டு கற்களை அனுமதியற்ற முறையில் 

வவுனியாவிற்கு கொண்டு சென்ற முன்னால் மாகாணசபை உறுப்பினர் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். 

தண்ணிமுறிப்பு பகுதியில் எதுவித அனுமதியும் அற்ற நிலையில் பாரிய இரண்டு கற்களை பிடுங்கி கனரக வாகனங்களின் கொண்டுசென்றவேளை 

இராணுவத்தினரின் வீதிசோதனை நடவடிக்கையின் போது மறிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். 

பாரிய கல்லினை ஏற்றிசென்ற வாகனம் மற்றும் பட்டாவாகனம் மற்றும் சொகுசு வாகனம் என்பன ஒட்டுசுட்டான் பொலீசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து ஒரு கைபிடி மண்ணும் மீட்கப்பட்டுள்ளது புதையல் தோண்டும் நடவடிக்கை என பொலீசாரால் சந்தேகிக்கப்பட்டுள்ளதுடன் 

இது தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் கைதானவர்களையும் சான்றுபொருட்களையம் 

நீதிமன்றில் முற்படுத்தும் சட்டநடடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு