சிறுமியை கடத்தி கூட்டு வன்புணர்வு!! -5 பேர் கும்பல் கைது-
இந்தியா சத்தீஸ்கரில் பழங்குடி இன சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த சத்தீஸ்கர் மாநிலம் ஜெஸ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பழங்குடியின சிறுமி சம்பவத்தன்று திருமண நிகழ்வுக்கு சென்றிருந்தார். அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் திருமண வீட்டில் இருந்து கடத்தி சென்றது.
பின் அந்த சிறுமியை அவர்கள் அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 5 பேரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் 5 பேரையும் கைது செய்தனர். இதில் 3 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.