ஆங்கிலப் பாட ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட English Festival Ceremony
காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய ஆங்கிலப் பாட ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட English Festival Ceremony
மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய ஆங்கிலப் பாட ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட English Festival Ceremony பாடசாலையின் அதிபர் எஸ்.எல்.அப்துல் கபூரின் தலைமையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை(10) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். எம். எம் .எஸ். உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார்.மேலும் கௌரவ அதிதிகளாக ஆங்கிலப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம் மர்சூக் வரலாறு பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹக்கீம் உடற்கல்வி பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரிஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் விசேட அதிதிகளாக காத்தான்குடி மீரா ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் மௌலவி எம்.ஐ ஆதம்லெப்பை பலாஹி மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எஸ்.எம் ஸாபித்தும் கலந்து கொண்டிருந்ததுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கல்விசாரா ஊழியர் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் English Festival Ceremonyயில் மாணவ,மாணவிகளின் ஆங்கில மொழியிலான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் English Exhibition, English Activity Room, அதேபோன்று பாரம்பரிய உணவு முறைகளைக் கொண்ட English Food Festival என்பன திறந்து வைக்கப்பட்டமை இந்நிகழ்வின் மேலதிக சிறப்பம்சமாகும்.