இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமிபோல் இலங்கையில் சுமந்திரன் ஜோக்கர் ஆகியுள்ளார்..

ஆசிரியர் - Editor I
இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமிபோல் இலங்கையில் சுமந்திரன் ஜோக்கர் ஆகியுள்ளார்..

எம்.பி சுமந்திரனை தனிப்பட்ட வகையில் அவரை தாக்கிப் பேச வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால் அவர் சில சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு சொல்லுகின்ற சேய்தியே இந்தியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி அங்கு உள்ளவர்களால் எவ்வாறு ஜோக்கராக பார்க்கப்படுகின்ராரோ ஆதே அளவிற்கு சுமந்திரனின் செயற்பாடுகளும் ஜோக்கல் போன்றே உள்ளது. என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.

ஊடக சுதந்திர தினமான நேற்று ஊடகப் போராளிகளை நினைவு கூறும் நிகழ்வு றக்கா வீதியில் அமைந்துள்ள ஆட்கலறி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யுத்தம் முடிந்திருந்தாலும், யுத்திம் நடைபெற்ற காலப்பகுதியையும் விடவும் அதிகளவான பிரச்சினைகளுக்கு தற்போது முகம் கொடுத்து வருகின்றோம். இப்போது அதிகார பகிர்வைப் பற்றி பேசுகின்றோம், சமாதனம் உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றி பேசுகின்றோம்.

தமிழ் மக்களுடைய உள்ளக்கிடக்கைகளை இராஜதந்திர வட்டாரத்திற்கோ, சிங்கள மக்களுக்கோ அல்லது சர்வதேசத்திற்கோ சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு ஆங்கி பத்திரிகையின் தேவை இன்றுவரை நிவர்த்தி செய்யப்படவில்லை.

இன்று வராவாரம் புதிய புதிய வராந்த பத்திரைககள் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படுகின்றன. அப் பத்திரிகை எவ்வளவு காலத்திற்கு நீடித்து நிற்கும் என்பது கேள்வி. சுpல நிறுவனங்கள் கூட வேறு ஒருவருடைய பெயரில் புதிய பத்திரிகைகளை வெளியிடும் நிகழ்ச்சி நிரல்களும் நடைபெறுகின்றுது.

எந்த ஒரு அரசாங்கமும் தனக்கு எதிரான விமர்சனங்களை ஊடகங்கள் முன்வைக்கும் போது, ஜனநாயகத்திற்கு அப்பால் சென்று நில நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறான சம்பவங்கள் இங்கு அதிகளவில் நடந்துள்ளது.

இன்று நல்லாட்சி அரசாங்கம் இருப்பதாக செல்லப்படுகின்றது. இதுவரை 43 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. இவற்றில் 40 ஊடகவியலாளர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள். கொல்லப்பட்ட ஒரு ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் தமிழ் ஊடகத்தை பார்த்து ஊடகம் திருந்திக் கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய அளவிற்கு தமிழ் அரசியல் வாதிகள் உள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த போது அப்படி எழுதிநீர்களா? அல்லது மஹிந்த ராஜபக்ச இருந்த போதும் அப்படி எழுதிநீர்களா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளார்கள்.

எம்.பி சுமந்திரனை தனிப்பட்ட வகையில் அவரை தாக்கிப் பேச வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால் அவர் சில சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு சொல்லுகின்ற சேய்தியே இந்தியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி அங்கு உள்ளவர்களால் எவ்வாறு ஜோக்கராக பார்க்கப்படுகின்ராரோ ஆதே அளவிற்கு சுமந்திரனின் செயற்பாடுகளும் ஜோக்கல் போன்றே உள்ளது.

குறிப்பாக ஜே.வி.பி யின் மே தின ஊர்வலத்திற்குச் செல்வார், இன்று ஒன்றை செல்லிவிட்டு, நாளை அதை செல்லவில்லை என்பார். நல்லாட்சி அரசாங்கம் என்று தன்வாயால் செல்லவிட்டு, பின்னர் சொல்லுவார் இந்த அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என்று நான் சொல்லவில்லை என்பார்.

தமிழ் ஊடகங்கள் இனவாதத் தன்மையுடன் இயங்குவதாக சொல்லப்படுகின்றது. தமிழ் மக்கள் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனமாக 60 ஆண்டுகளுக்கு மேலாக அகிம்சையிலும். ஆயுத வழியிலும் போராடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு இனமாக உள்ளார்கள்.  

இந்த நிலையில் தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக எழுதுகின்றமை இனவதாமாக கருத முடியாது. குறைப்பாடுகளை, உரிமைகளை, தேவைகளை சுட்டிக்காட்டுவது இனவாதமாக அமையாது. யாழ்ப்பாணத்திலோ வன்னியிலோ 3 பேர் கொல்லப்பட்டுவிட்டால், தமிழ் பத்திரிகை 3 தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று செய்தி வெளியிடும். ஆனால் சிங்க பத்திரிகை புலிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியிடும். அதே போன்று மற்றுமொரு பத்திரிகை 3 புலிகள் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியிடும். இந்த நிலை ஊடகத்துறையில் உள்ளது.

ஊடகங்கள் இன்றுவரை சுதந்திரமாக இயங்கவில்லை. எல்லா ஊடகங்களும் முதலாளிகளுக்கு கட்டுப்பட்டே இயங்குகின்றது. தமிழ் மக்கள் யுத்தத்தில் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் நீண்ட உரிமை போராட்டம் நடைபெற்று வருகின்றது. 

அதற்கான தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை. தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மிகப் பாரிய பொறுப்பு உள்ளது. குறிப்பாக உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது, சிங்கள மக்களுக்கும் எமது பிரச்சினையை வெளிப்படுத்துவது மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கும் பிரச்சினைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக இருந்தால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஒரு ஊடகவியலாளர் நாட்டில் எங்கு சென்றும் சுதந்திரமாக சேய்திகளை சேரிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. ஊடகவியலாளனின் சேய்தி தேடலுக்கு இந்த நாட்டில் கட்டுப்பாடு இருக்கின்றது.

கொழும்பிற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்திலேயே ஊடகத்துறை வளர்ந்து நிற்கின்றது. இதனை சுமநத்திரன் அறிந்து கொள்ள வேண்டும். அவர் இன்னும் சற்று அதிகமாக கற்றுக் கொள்ள வேண்ம். வேறுமனே சட்ட அறிவு மட்டும் போதாது. சட்ட அறிவுக்கு அப்பாலும் பல அறிவுகள் இருக்கின்றன. அவற்றையும் சுந்திரன் கற்றுக் கொண்டால் நன்று என்றார்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு