புழுதி புயல் – பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது
ராஜஸ்தான்இ உத்தரப்பிரதேசம்இ உத்தரகாண்ட்இ பஞ்சாப்இ மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் திடீரென தாக்கியது.
இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புழுதி புயலில் சிக்கி 42 பேர் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.
ஆனால்இ தற்போது அங்கு பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறிப்பாகஇ ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பிஜினோர்இ பெய்ரெலி மற்றும் ஷாரன்பூர் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து. உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவில் மீட்பு பணி நடைபெற உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் இதுவரை 31 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்துள்ளன.
இதேபோல்இ ஜார்க்கண்ட்இ உத்தரகாண்ட்இ பஞ்சாப்இ மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா 2 பேர் இறந்துள்ளனர்.
புழுதி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து அளிக்கும்படி அந்தந்த மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.