SuperTopAds

மேலும் 54 சீன செயலிகளுக்கு இந்தியா அரசு அதிரடி தடை!!

ஆசிரியர் - Editor II
மேலும் 54 சீன செயலிகளுக்கு இந்தியா அரசு அதிரடி தடை!!

நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த காரணமாக 54 சீன செயலிகளுக்குஇந்திய மத்திய அரசாங்கம் அதிரடி தடை விதித்துள்ளது. இத் தகவலை அந்நாட்டின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர்மட்ட ஆதராங்கள் தெரிவித்துள்ளன.

2020 ஜூன் முதல், TikTok, Shareit, WeChat, Helo, Likee, UC News, Bigo Live, UC Browser, ES File Explorer மற்றும்  Mi Community  போன்ற பிரபலமான பயன்பாடுகள் உட்பட சுமார் 224 சீன ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயன்பாடுகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. இந் நிலையிலேயே புதிய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.